×

கொடைக்கானலில் ஆழ்துளை கிணறுகளை மூட விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

கொடைக்கானல், நவ. 7: கொடைக்கானலில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.கொடைக்கானலில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மலைப்பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நீதிபதி தினேஷ்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முகமது மைதீன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் பற்றி தகவல் கொடுத்தால், அந்த கிணறுகளை கொடைக்கானல் வட்ட சட்ட பணிகள் குழு இலவசமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி பயனற்ற ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும், அந்த கிணறுகளை கையாளுவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், சட்டப்பணிகள் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : wells ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு