×

சூதாடிய 10 பேர் கைது


திருப்பூர், நவ. 7: திருப்பூர் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் பி.என். ரோட்டிலுள்ள தனியார் கிளப்பில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த கிளப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 10 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்கள் மடக்கி பிடித்து நெரிப்பெருச்சலை அடுத்த சின்னபுதூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ்(61) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.2 ஆயிரத்து 710 ரொக்கம் மற்றும் 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை