கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ 7: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திருப்பூர் காங்கயம் ரோடு அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மின்சார பஸ் சேவையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காங்கயம் ரோடு  அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  இதற்கு எல்.பி.எப். மண்டல தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் செல்லத்துரை, ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைத் தலைவர் பாலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சையது இப்ராகிம் (ஏ.ஐ.டி.யு.சி.) உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : transport unions ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்