×

மழை பாதித்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

குன்னூர், நவ.7:குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டது.  இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி அதே பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் குன்னூர் நகராட்சி சார்பில் மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : area ,
× RELATED நகராட்சி கமிஷனர் இல்லாததால் சீல்...