×

இரு புறமும் வாகனங்கள் நிறுத்துவதால் ரோஜா பூங்கா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, நவ. 7: ரோஜா பூங்கா சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர்.   ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பகுதிகளுக்கு அதிகளவு செல்கின்றனர். குறிப்பாக, விஜயநகரம் பகுதியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர். சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையில் அலங்கார் சந்திப்பில் இருந்து பூங்கா நுழைவு வாயில் வரை சாலையோரங்களில் இரு புறங்களிலும் சிலர் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர்.  குறிப்பாக, ரோஜா பூங்கா சாலையோரங்களில் கடைகள் வைத்துள்ளவர்கள் கார்கள் மட்டுமின்றி, வேன், லாரி ேபான்றவைகளும் நிறுத்திக் கொள்கின்றர்.      இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.   எனவே, சாைலயோரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்தால், சுற்றுலா பயணிகள் எளிதாக பயணிக்க முடியும். அதேசமயம், போக்குவரத்து தடை மற்றும் நெரிசல் ஏற்படாது.

Tags : Rose Park Road ,
× RELATED விருத்தாசலத்தில் இரு தரப்பினர் இடையே...