×

6 வட்டங்களில் நாளை சிறப்பு திட்ட முகாம்


ஊட்டி, நவ. 7: நீலகிரியில் உள்ள 6 வட்டங்களில் நாளை (8ம் தேதி) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. நீலகிரி  மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு திட்ட  முகாம்  நடக்கிறது. இதில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்ெதாகை,  நலிந்தோர்  உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை  மற்றும்  வருவாய்த்துைற மூலம் வழங்கப்படும் சான்றுகள், ேரஷன் கார்டுகளில்  பெயர்  சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  அரசுத்துறை சார்ந்த குறைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி  ெசய்யப்பட்டு வருகிறது.  மேலும், பல்வேறு சிறு தொழில் உதவிகளுக்கு  விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக நாளை 8ம் தேதி நீலகிரி  மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில்  சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதன்படி  ஊட்டி வட்டத்திற்குட்பட்ட  ஊட்டி மேற்கு, முள்ளிக்கொரை சமுதாய  கூடத்திலும், குன்னூர் வட்டத்தில்  மேலூர்-3, கொலக்கொம்பை சமுதாய  கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் கடினமாலா,  கோத்திமுக்கு சமுதாயக்  கூடத்திலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.  குந்தா வட்டத்திற்குட்பட்ட  பிக்கட்டி, குந்தா பிக்கட்டி சமுதாய  கூடத்திலும், கூடலூர் வட்டத்தில்  தேவாலா ஜி.டி.ஆர். நடுநிலைப்பள்ளி,  பந்தலூர் வட்டத்தில் எருமாடு-2,  கப்பாலா அரசு உண்டு உறைவிடப் பள்ளியிலும்  நடக்கிறது. இதில் பொதுமக்கள்  தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு  பெற்று கொள்ளலாம் என  தொிவிக்கப்பட்டுள்ளது.

Tags : project camp ,
× RELATED காட்பாடி அடுத்த பரதராமியில் இருந்து...