×

அவினாசி சாலையில் ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் ரூ.3.40 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார்

பெ.நா.பாளையம், நவ. 7:  அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம்)  வரை ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் அமைக்க ரூ.3.40 கோடி மதிப்பில் முழுமையான  திட்ட அறிக்கை தயார் செய்யபட்டுள்ளதுகோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்,  நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில்  பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது :  கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இங்கு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். இந்த சிறப்பு முகாமில் 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூ.192 கோடி மதிப்பீட்டில் காந்திபுரம் முதலடுக்கு உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்ட மேம்பாலப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ரூ.215.51 கோடி மதிப்பில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் ரூ.130.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம்) வரை ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் அமைக்க ரூ.3.40 கோடி மதிப்பில் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யபட்டுள்ளது. இருகூர் முதல் போத்தனூர் மற்றும் இருகூர் முதல் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.58.80 கோடி மதிப்பில் மேம்பாலம்.  மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலைவசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 பாலங்கள் ரூ.135.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.20.34 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகக் கட்டிடம், ரூ.4.45 கோடி மதிப்பில் மதுக்கரை மற்றும் பேரூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படப்பட்டுள்ளன. இதுபோல எண்ணற்ற திட்டங்கள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார்.இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய்  அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட  இயக்குநர் ரமேஷ்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா இராமசாமிஉள்ளிட்ட அரசுத்துறை  அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை: குடிமகன்கள் அதிருப்தி