×

தாட்கோ வாயிலாக மானியத்துடன் வங்கிக்கடன்

கோவை, நவ. 7: தாட்கோ வாயிலாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற இந்து - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிடர் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் - application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் - fast.tahdco.com என்ற
இணையதள முகவரியிலும் தாட்கோ வாயிலாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள். நிரந்தர சாதி சான்று, வருமான சான்று வருட வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், திட்ட அறிக்கை தொடங்கவிருக்கும் தொழிலுக்கான விலைப்புள்ளி, கோவை மாவட்டத்திற்குள் பெற்றதாக இருக்க வேண்டும், விலைப்புள்ளி பெறப்படும் நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டின்(GSTin) எண் அவசியம் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தாட்கோ வாயிலாக நேர்காணல் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் விரும்பிய வங்கிக்கிளைக்கு கடன் வழங்கும் வகைக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்படி வங்கிக்கிளை கடன் வழங்க விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் தாட்கோ மூலம் மானியத் தொகை முன் விடுவிப்பு மானியமாக விடுவிக்கப்படும்.ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் கோரும் கடன் தொகையில் ஒரு லட்சத்திற்கு 30% மானியம் விடுவிக்கப்படும். அதிகபட்ச மானியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு 50% மானியம் விடுவிக்கப்படும். அதிகபட்ச மானியம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tatco ,
× RELATED 50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்