மேட்டூர் வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறப்பு

ஈரோடு, நவ. 7: மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் மேற்கு மற்றும் கிழக்கு கரை பாசனத்தில் உள்ள நிலங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. வினாடிக்கு 600 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாசன பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் மீண்டும் 600 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடவு பணிகள் மற்றும் மழைப்பொழிவு பொருத்து தண்ணீர் திறப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: