சிலை உடைப்பு விவகாரம் மேலும் 3 பேர் கைது

மொடக்குறிச்சி, நவ.7: சிவகிரி அடுத்த தலையநல்லூர் தொப்பபாளையத்தில் காளியண்ணன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டு சிலைகள் புதிதாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் மர்ம நபர்கள் நள்ளிரவில் இரும்பு தடுப்பு வேலியை உடைத்து உள்ளே சென்று சிலைகளை சேதப்படுத்தினர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 13 பேரை கைது செய்துள்ளனர். இந் நிலையில் நேற்று முன்தினம் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக அரச்சலூர் அடுத்த வடுகபட்டி மூவேந்தர் நகரைச் சேர்ந்த மனோஜ் (21), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (46), ஈஸ்வரன் (48) உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: