×

விவசாயிகள் கோரிக்கை நெப்புகை கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி பயிற்சி

புதுக்கோட்டை, நவ. 7: கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து நெப்புகை கிராம சமுதாய கூடத்தில் சுருளிமலை, வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் திருப்பதி மாவட்ட திட்ட ஆலோசகர் முன்னிலையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் சுருளிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வேளாண் பழமொழிகள் குறித்து பேசினர். அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்து கூடுதல் மகசூல் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் திருப்பதி முக்கிய இடுபொருட்களான விதை, தண்ணீர், உரம், பயிர்பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடன் மற்றும் எந்திரங்கள் குறித்தும் திட்ட மானிய விபரங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

வேளாண்மை அலுவலர் மத்திய அரசுத் திட்டம் பாண்டி, விதையின் முக்கியத்துவ மற்றும் எந்திர நடவு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை துணை இயக்குநர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கையேடு மற்றும் இடுபொருட்கள் வழங்கினார்கள். உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் விதை நேர்த்தி முறைகளுக்கான செயல்விளக்கம் செய்து காட்டினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ஜெயவேலன், துணை வேளாண்மை அலுவலர் சவடமுத்து மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் மற்றும் பயிர் காப்பீட்டு திட்ட பணியாளர்கள் அன்பரசன், திருமேனி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Farmers Demand Paddy Cultivation Training for Farmers ,Nepugai Village ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...