×

புதுக்கோட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (8.11.2019) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டையில் தனியார்துறை...