காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

கந்தர்வகோட்டை, நவ.7: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கணபதிபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுறவு விளையாட்டு போட்டியாக ஆதனக்கோட்டை போலீசார் சார்பில் கைப்பந்து போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆதனக்கோட்டை போலீசார் கைப்பந்து போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டி நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக் கொண்டவர்களுக்கும் ஆதனக்கோட்டை காவல் நிலைய எஸ்ஐ கனகராஜ் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் போலிசார் மற்றும் கிராமத்து இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags : Public Relations Game Competition ,
× RELATED மாணவனை சுட்டுக்கொன்ற வழக்கு தேனியில் சரணடைந்த ரவுடிக்கு போலீஸ் காவல்