×

செம்பனார்கோவில் வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிட தோட்டக்கலை அழைப்பு

தரங்கம்பாடி, நவ.7: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிட தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பனார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தேவையான காய்கறி விதைகள் கொத்தவரை, வெண்டை, பாகல், புடல், மிளகாய், கத்தரி, சுரை, கீரை, கிர்ணி மற்றும் வெள்ளரி உள்ளிட்டவை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரப்பெற்று வட்டார அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்தி நில ஆவணங்களை வழங்கி விதைகளை பெற்று காய்கறி தோட்டம் அமைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காய்கறிகள், பூக்கள், முந்திரி, மா போன்ற பல்லாண்டு பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயத்திற்கான தண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் தங்கள் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன வசதிகள் அமைத்து பயன்பெற அழைக்கப்படுகிறார்கள். சிறு மற்றும் குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி தெரிவித்துள்ளார்.

Tags : Sembanarko Region ,
× RELATED 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி...