×

மஜக வலியுறுத்தல் மாவட்ட அளவில் ஹேண்ட்பால்போட்டி நாகூர் பள்ளி மாணவர்கள் முதலிடம்

நாகை, நவ.7: நாகை மாவட்ட அளவில் நடந்த ஹேண்ட்பால் போட்டியில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிற்கான ஹேண்ட்பால் போட்டி கொள்ளிடத்தில் நடந்தது.

இதில் 8 அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதிபெற்றனர். அதேபோல் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், கதிரவன், சக்திவேல், விமல்ராஜ் ஆகியோரை ஆட்சிமன்றகுழு தலைவர் ரவி, செயலாளர் சண்முகம், பொருளாளர் காவ்யாசுந்தரவேலு, தலைமை ஆசிரியர் செல்தில்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.

Tags : Handballpotty Nagore ,school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...