×

திருவள்ளுவர் சிலையை அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

கீழ்வேளூர், நவ.7: மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: புகழ்பெற்ற திருக்குறளை வழங்கி தமிழுக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு சேர்த்த திருவள்ளுவர் அவர்களின் சிலை தஞ்சாவூர் அருகே பிள்ளையார் பட்டியில் சேதப்பட்டுள்ளது கண்டிக்க தக்கது, சிலை வழிபாட்டில் நம்பிக்கையற்ற எங்களை போன்றவர்கள் சிலைகளை மதிப்பவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

அந்த வகையில் சாமி சிலையாக இருந்தாலும், தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் சிலையாக இருந்தாலும், அவை பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் உரியவைகளாகும். முன்பு சிலர் பெரியார் சிலைகளை சேதப்படுதி தமிழர்களை சீண்டினார்கள். இப்போது திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழர்களை சீண்டுகிறார்கள். திருவள்ளுவர் போன்ற பொதுவானவர்களை ஒரு வட்டத்திற்குள் சிக்கவைக்க முயற்சி நடைபெறும் வேதனையான சூழ்நிலையில் இப்போது திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது. இதில் ஈடுப்பட்ட தீய சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : persons ,Tiruvalluvar ,idol ,
× RELATED விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட வன அலுவலர் பேட்டி