×

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கல்

நாகை, நவ.7: நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் திமுக சார்பில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நாகை தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். எம்எல்ஏ மதிவாணன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் வந்த பயணிகளுக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் டெங்கு நோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் திருமலைசாமி, நகர செயலாளர் பன்னீர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன், தாமஸ்ஆல்வாஎடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்