×

29ம் தேதி கடைசி

திருவாரூர், நவ.7: திருவாரூர் தேவி நகரில் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தேவி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் மருத்துவர் ஒருவர் மூலம் அவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் ஒன்று அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் அருகில் வசித்து வருபவர்களுக்கு உடல் ரீதியாக பாதிப்பு மட்டுமின்றி புயல் காலங்களில் செல்போன் டவர் சாய்ந்தால் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூலம் கடந்த 6 மாதத்திற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தற்போது அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளதால் இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு நல சங்க தலைவர் ராஜீ என்பவரது தலைமையில் பொதுமக்கள் சம்பவ இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Tags :
× RELATED 29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்