×

நாகை அருகே குடிநீர் குழாயில் ஓட்டை சீரமைப்பு

நாகை, நவ.7: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு சீர் செய்யப்பட்டது. நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணி அடுத்த ரெட்டாலடி பாலம் அருகே அமைக்கப்பட்டு இருந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் 20 அடி தூரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணானது. குடிநீர் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் சாலையில் சென்றது. குடிநீர் வீணாக ஓடியதுடன் சாலையும் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு தினந்தோறும் வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீரை தடுக்க விரைந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 4ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி மற்றும் படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து குடிநீர்குழாயில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து சரி செய்யப்பட்டது. இதனால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக செல்வது தடுக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Naga ,
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...