×

யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் கவலை

சீர்காழி கொள்ளிடம் வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டு பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளதால் களையெடுக்கும் பணி நடக்கிறது. களை எடுத்தால் யூரியா இட வேண்டும். அப்போதுதான் தழைச்சத்து கிடைத்து பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் கிடைக்கும். ஆனால் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு இருந்து வருகிறது. தற்போது மழை பெய்யாததால் இந்த தருணத்தில் யூரியா இட்டால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்பதால் விவசாயிகள் யூரியாவை வாங்க உரக்கடைகளுக்கு அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மழைபெய்ய துவங்கினால் அப்போது யூரியா இட்டால்  பலன் தராது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யூரியா உரிய நேரத்தில் பயிர்களுக்கு இடவில்லை என்றால் குறைந்த காலத்தில் கதிர் வந்து மகசூல் முற்றிலும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். மகசூல் குறைந்தால் விவசாயிகள்  இழப்பீடு கேட்டு போராட வேண்டிய நிலை வரும்.  யூரியா தட்டுப்பாட்டை காரணம் காட்டி சில உரக்கடைகள் கூடுதல் விலைக்கு யூரியாவை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து  சீர்காழியில் தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க மாவட்ட நிர்வாகம் வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...