×

திருவாரூர் தேவி நகரில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் பயன்பாட்டிற்கு விட கோரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு எஸ்பி கடும் எச்சரிக்கை

திருவாரூர், நவ.7: திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் சுற்றி திரியவிடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.மாவட்டத் தலைநகரான திருவாரூர் நகரினை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பயன்படுத்திவரும் நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் நகரில் தற்போது பெய்து வரும் மழையினையொட்டி வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள், குதிரைகள் உட்பட அனைத்து கால்நடைகளும் தெருக்களில் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் திருவாரூர் பஜன மட தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சுந்தர் (32) என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி திருவாரூர் புதுத்தெருவில் குறுக்கே பசு மாடு ஒன்று வந்து விடவே எதிர்பாராத விதமாக அதன் மீது பைக் மோதியதில் இறந்தார்.

இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த 30ம் தேதி வெளியானதையடுத்து நகரில் சுற்றி திரிந்த மாடுகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடித்து பழைய பேருந்து நிலையம் உட்பட நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அடைக்கப்பட்டது மட்டுமின்றி மாடுகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 13 பேர்கள் டவுன் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் மாவட்ட எஸ்.பி துரை நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருவாரூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் திரியவிட்ட 35 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மாவட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் அவைகளை உரிய முறையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், சாலைகளில் சுற்றித்திரியவிடப்பட்டால் கால்நடைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துகொள்ளப்படுகிறது. இவ்வாறு எஸ்.பி துரை தெரிவித்துள்ளார்.


Tags : SP ,cattle breeders ,Thiruvarur district ,
× RELATED ஊத்துக்கோட்டை கால்நடை...