பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

முத்துப்பேட்டை, நவ.7: விஸ்வகர்மா சமூகத்துக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாநில தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:விஸ்வகர்மா சமூகம் கோயில்களில் சிலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஸ்தபதி வேலைகளை பார்த்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்கும்போது, அக்குழுவில் விஸ்வகர்மா சமூகத்தினர் ஒருவரையும் இடம்பெற செய்யவேண்டும். பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Viswakarma ,
× RELATED திருமண உதவி தொகையை உடனே வழங்க கோரிக்கை