பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட 128 அரசு பள்ளிகளுக்கு ₹64 லட்சம் நிதி தலா ₹50 ஆயிரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

வேலூர், நவ.7:பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு 2018-19ம் கல்வி ஆண்டில் இருந்து தலா ₹50 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.அதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் ஒவ்வொரு சுதந்திர தினம், குழந்தைகள் தினம், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று தினங்களில் கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்கான மினிட் புத்தகம் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
Advertising
Advertising

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அதிகளவில் நன்கொடைகள் பெறப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த விவரங்களையும் பதிவேடுகளில் பராமரித்து இருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளுடன் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் செயல்பாடுகளை கொண்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மாவட்டத்துக்கு 4 பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்கப்படுகிறது.எனவே, 32 மாவட்டங்களிலும் மேற்கண்ட விதிமுறைகளுடன் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து அந்த பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

====================

Related Stories: