×

செங்குன்றம் பகுதியில் மாடு திருட முயன்ற ஆசாமி கைது

புழல், நவ. 7: செங்குன்றம், புழல், வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன், செட்டிமேடு பகுதிகளில் ஜிஎன்டி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதில் ஒருசில மாடுகள் திருடு போய்விடுகின்றன.
இந்நிலையில், வடபெரும்பாக்கம் அடுத்த செட்டிமேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு  ஒரு சரக்கு ஆட்டோவில் 3 பேர் கும்பல் சுற்றி திரிந்தது. அங்கு சாலையில் படுத்திருந்த மாடுகளை பிடிக்க முயற்சித்தனர். இதனால் மாடுகள் மிரண்டு கத்தவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அங்கு மாடுகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சோழவரம் அடுத்த கும்மனூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரமேஷ் (30) எனத் தெரியவந்தது. மேலும், அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சரக்கு ஆட்டோவில் மாடுகளை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட ரமேஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Azami ,
× RELATED மத்திய பிரதேசத்தில் பசுக்களின்...