×

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் மோசடி

சென்னை, நவ. 7: சென்னை தண்டையார்பேட்டை, வரதராஜபெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக, அதே பகுதியை சேர்ந்த கணவன், மனைவியான டில்லி வெங்கடேஸ்வரன் (45), அருணா ஜோதி (40) மற்றும் பாபு சியாம் (40) ஆகிய 3 பேரும் கடந்த 2015ம் ஆண்டு ராஜேந்திரனிடம் ₹9 லட்சம் வாங்கியுள்ளனர்.

அவர்கள் கூறியது போல் வேலை வாங்கி தராததால் ராஜேந்திரன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக டில்லி வெங்கடேஸ்வரன் மற்றும் பாபு சியாம் வசித்து வந்த வீடு பூட்டி கிடந்தது.
இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் புகாரளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவன், மனைவியான டில்லி வெங்கடேஸ்வரன், அருணா ஜோதி ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருக்கின்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வாடகை கார் பெற்று மோசடி