×

சோமனூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு

சோமனூர், நவ.6:  சோமனூர் துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சோமனூர் செயற்பொறியாளரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. தமிழக மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 1ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சோமனூர் துணை மின் நிலைய மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யக் கோரி சோமனூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 1998ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களையும் தற்போது வரைக்கும் பணி நிரந்தரம் செய்யவில்லை, தினசரி கூலி ரூ.380 வழங்குவதாக கூறியும் வழங்கப்படவில்லை, இவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலவுகின்ற மின் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : electricity contract workers ,
× RELATED தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்...