×

100 நாள் வேலை திட்டத்தில் வயதான தொழிலாளர்களுக்கு கூலி வழங்காதது ஏன்?

சேத்துப்பட்டு. நவ.6:  சேத்துப்பட்டு அடுத்த கோனையூர் கிராமத்தில் 100 நாள் வேைல திட்டத்தில் பணியாற்றும் வயதான தொழிலாளர்களுக்கு கூலி வழங்காதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:கோனையூர் கிராமத்தில் 100 நாள் வேலை செய்து வரும் வயதான தொழிலாளர்களுக்கு கூலி தருவதில்லை. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் விநாயகபுரம், கோனையூர், குடிசைக்கரை, இமாபுரம் கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த 3 மாதமாக நடந்த கூட்டங்களில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கையும் இல்லை.
பெரிய கொழப்பலூர் கிராமத்தில் ஊருக்கு நடுவே பள்ளிகள் மற்றும் கோயிலுக்கு அருகாமையில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதை மாற்றக்கோரி 36வது முறையாக புகார் செய்கிறனே். உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினர்.

Tags :
× RELATED வேளாண்துறையில் ஊழியர்களுக்கு மாத...