×

ஆரணி அருகே எரிசாராயம் கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, நவ.6: ஆரணி அருகே சேத்துப்பட்டு சாலை நெசல் கிராமத்துக்கு அருகே, கடந்த செப்டம்பர் 17ம் தேதி இரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட எரிசாராயம் சிக்கியது. தொடர்ந்து,  கடத்தலில் ஈடுபட்ட செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் விஜயகுமார்(36), மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமம் சம்பத்(40), அன்மருதை முருகன்(36) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.விசாரணையில், 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிபிசக்ரவர்த்தி பரிந்துரை செய்தார்.அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அமைக்ககலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் உள்ள 3 பேரிடமும் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Tags : persons ,
× RELATED நிலப்பிரச்னையில் விபரீதம்...