×

வேட்டவலம் அடுத்த வயலூர் கிராமத்தில் 400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

வேட்டவலம், நவ.6:  வேட்டவலம் அடுத்த வயலூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. பால் கூட்டுறவு  சங்க தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் கால்நடை ஆய்வாளர் சம்பத்ராணி, கருவூட்டல் பயிற்சியாளர்கள் வேலு, சிவானந்தம் ஆகியோர் 400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். மேலும், முகாமில் கால்நடை வளர்ப்போருக்கு இலவசமாக தீவன சோள விதை வழங்கப்பட்டது. முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர்  தெய்வீகன் நன்றி கூறினார்.

Tags : village ,Vayalur ,
× RELATED நிவர் புயல் காரணமாக ஈரோடு வார சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது