மதிப்பு கூட்டு பொருளாக அறிவிக்கக்கோரி வெங்காய மாலை அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு, நவ.6:  வெங்காயத்தை மதிப்பு கூட்டு பொருளாக அறிவிக்கக்கோரி செய்யாறில் விவசாயிகள் வெங்காய மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு பிடிஓ அலுவலக அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அலுவலகம் வெளியே விவசாயிகள் வெங்காயத்தை மாலையாக அணிந்து, திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘வெங்காய விலையை நிலைப்படுத்த வேண்டும். உற்பத்தி பெருக்க விதை, நாற்று மற்றும் கடனுதவி வழங்க வேண்டும். அறுவடைக்கு பின் சேமிக்க கிடங்கு அமைத்து தரவேண்டும். வெங்காயத்தை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : onion garland ,
× RELATED கண்ணமங்கலம் அருகே உழவர் திருவிழாவில்...