×

கண்ணமங்கலம் அருகே பைக்குகள் மோதி தொழிலாளி பலி

கண்ணமங்கலம், நவ.6:  காளசமுத்திரம் அடுத்த சின்ன சாமந்திபுரம் இருளர் காலனியை சேர்ந்தவர் ராஜா(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சமுத்திரம்(25). இவர்களுக்கு கிஷோர்(2) மற்றும் 6 மாத குழந்தை என இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று பைக் தவணை கட்ட ராஜா தனது பைக்கில் கண்ணமங்கலத்தில் இருந்து ஆரணிக்கு சென்றார். அப்போது, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த சேம்குழலன்(23), ஜெயகிருஷ்ணன்(23) ஆகியோர் ஆரணி சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அம்மாபாளையம் கூட்ரோடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக இரு பைக்குகளும் நேருக்குநேர் மோதியது. இதில் ராஜா தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சேம்குழலன், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் படுகாயமடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய்...