×

கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை, அக். 23:  கூடுதல் பணியாளர்களை நியமிக்கக்கோரி, அருப்புக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில், துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ‘மழை காலங்களில் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிய மழை கோட் வழங்க வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை, பணப்பயன், பென்சன் ஆகியவற்றை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்கள் முறையாக வழங்க வேண்டும். நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்புகளை மராமத்து செய்ய வேண்டும். நகராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் கணேசன், கிளைத்தலைவர் முனியாண்டி உட்பட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Cleanup workers ,
× RELATED பாதுகாப்பு உபகரணங்கள், வழங்கவில்லை:...