×

பட்டாசு பதுக்கல்: குடோனுக்கு சீல்

சிவகாசி, அக். 23:  சிவகாசியில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசியை சேர்ந்தவர் அமிர்தகுமார். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை சிவகாசி சேர்மன் பி.கே.எஸ்.,ஆறுமுகம் ரோட்டில் உள்ளது. கடைக்கு மட்டுமே உரிமம் பெற்று பட்டாசுகளை விற்பனை செய்து வந்த நிலையில், கடை அருகிலேயே உரிமம் பெறாமல் குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தார். இந்த குடோனில் சப்கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் ரங்கநாதன் ஆய்வு செய்தனர். இதில் 294 பட்டாசு பண்டல்கள், 200 கிப்ட் பாக்ஸ் மற்றும் உதிரி வெடிகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக குடோனை சீல் வைத்தனர்.

Tags : Goodone ,
× RELATED விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில்...