×

இளையான்குடியில் தண்ணீரில் மிதக்கும் துணை மின்நிலையம் 120 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

இளையான்குடி, அக். 23: தண்ணீரில் மிதக்கும் இளையான்குடி துணை சார்பு மின்நிலையத்தால், அப்பகுதிகளில் 120 கிராமங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இளையான்குடியில் தாலுகா ஆபிஸ் பின்புறம் 110 கி.வோல்ட் துணை சார்பு மின் நிலையம் செயல்படுகிறது. இருபத்துஏழு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 120 கிராமங்களுக்கும், 18 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்த இளையான்குடி துணை சார்பு மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.இதுபோக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம், தாலுகா ஆபிஸ், இ-சேவை மையம், ஆதார் மையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கருவூலம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரி என அனைத்திற்கும் இந்த மின்நிலையத்தின் மூலம்தான் மின் சப்பளை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மின்நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மின் நிலையமே தண்ணீரில் தத்தளிக்கிறது.
முறையான பராமரிப்பு, கால்வாய், தடுப்புச்சுவர் இல்லாததால் கண்மாயில் பாய வேண்டிய மழைநீர் மின்நிலையத்திற்குள் பாய்ந்துள்ளது. மின்வாரிய அலுவலக பகுதி, மின் பகிர்மானம் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டு, அதனால் மின்விநியோகம் துன்டிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இளையான்குடி கண்மாய், ஊரணிகள் அனைத்தும் குடிமராமத்து பணி நடைபெற்றது. அதன் மூலம் எடுக்கப்பட்ட மண்னை கொண்டு இந்த மின் நிலையத்தின் தாழ்வான பகுதிகளை சீரமைத்திருக்கலாம், ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், நேற்று காலை ஆறு மணி முதல் 130 கிராமங்களில் மின்சாரம் துன்டிக்கப்பட்டது. அதனால் அன்றாடம் நடக்கும் அத்தியாவாசியப்பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது.அரசு அலுவலகங்களில் பணிகள் அனைத்தும் முடங்கியது. அதனால் இளையான்குடி துணை சார்பு மின் நிலையத்தைச் சுற்றி தடுப்புச்சுவர், முறையான வடிகால்கள், அமைக்க சரியான திட்டமிடுதலுடன் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages ,power station ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...