×

அக்.31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, அக். 23: சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31ல் நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31, வியாழன் காலை 10.30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Farmers' Oversight Meeting ,
× RELATED புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய...