×

தொடர் மழையால் நடைபாதை கடையில் வியாபாரம் டல் வியாபாரிகள் புலம்பல்

காரைக்குடி, அக். 23: காரைக்குடியில் தொடர் மழை பெய்து வருவதால் நடைபாதை கடைகளில் வியாபாரம் சரியில்லை என வியாபாரிகள் புலம்பி வருகினறனர். காரைக்குடியில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. செக்காலை ரோடு, நூறடி சாலை, அம்மன் சன்னதி, கண்ணன் பஜார், கல்லூரி சாலைகளில் உள்ள ஜவுளி கடைகள், மளிகை கடைகள், வெடி கடைகள், காலனி கடைகள் என அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.அதே வேலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளின் நிலை பரிதாமாக உள்ளது. செக்காலை ரோடு மற்றும் நூறடி ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் காலனி கடை, ரெடி மேடு கடை, தரைவிரிப்பு கடை, பெட்சீட் கடை, பெண்களுக்கான அணிகலன் கடை, போன்ற கடைகளை போட்டுள்ளனர். இவை அனைத்துமே தீபாவளிக்கு மட்டுமே போடப்படும் கடைகள் என்பதால் மேற்கூரையோ மின் விளக்குகளோ இருப்பதில்லை. கடந்த 10 நாட்களாக காரைக்குடியில் பகல், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இதனால் நடைபாதை வியாபாரகள் கடையை திறக்க கூட முடியவில்லை என புலம்புகின்றனர். பெரும்பாலோனோர் கடனுக்கு பணம் வாங்கி கடை போட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் நின்று நடைபாதை கடைகளில் வாங்குவதில்லை. இதனால் கடைபோட்டவர்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Merchants ,pavement shop ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...