×

மணல் கடத்தியவர் கைது: டிப்பர் லாரி பறிமுதல்

கமுதி, அக். 23: கமுதி அருகே பெருநாழி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு பெருநாழி அருகே டி.எம்.கோட்டை விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை பெருநாழி போலீசார் மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் எம்.கரிசல்குளத்தை சேர்ந்த வில்வலிங்கம் (30) என்பவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெருநாழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sand abductor ,Tipper ,
× RELATED லாரி டிரைவரிடம் வழிப்பறி