காரைக்குடியில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய டிஎஸ்பி

காரைக்குடி, அக். 23: காரைக்குடி பெரியார்சிலை பகுதியில் மாவட்ட சாலைபாதுகாப்பு படை, போக்குவரத்து காவல் துறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் காரைக்குடி சங்கமம் சார்பில் ஹெல்மெட் மற்றும் வாகனத்தில் செல்பவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெல்மெட் அணிந்தவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஆட்டோகளில் சீருடை அணிந்து வந்தவர்களுக்கு டிஎஸ்பி அருண் பரிசு வழங்கினார். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் போக்குவரத்து எஸ்.ஐ வீரக்குமார், சாலை பாதுகாப்பு படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன், லயன்ஸ் மாவட்ட இணைச்செயலாளர் பாதம்பிரியான், வட்டாரத் தலைவர் துர்காபாதம்பரியான், சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DSP ,
× RELATED மயிலாடுதுறையில் டிஎஸ்பி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு