×

அட்மா திட்ட ஆளுமைக்குழு கூட்டம்

சிவகங்கை, அக். 23: சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் ஆளுமைக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதை சான்றளிப்பு துறை, பட்டுவளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவில் விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளிகள், கண்டுணர்வு பயணங்கள் மற்றும் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் போன்ற பல்வேறு தொழில்நுட்ப செய்திகள் குறித்து விளக்கப்பட்டது.

விவசாயிகள் நவீன வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி எளிய முறையில் விவசாய பணிகளை மேற்கொண்டு பயனடையவும், இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்யும் போது விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கிடவும், தென்னை சாகுபடி விவசாயிகள் அனைவரும் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்திடவும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் (உபநி), சசிகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவ) சர்மிளா, வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன், வேளாண் வணிகத் துணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், கால்நடைத்துறை இணை இயக்குநர் முருகேசன், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பரமசிவம், விதைச்சான்றளிப்பு உதவி இயக்குநர் சாந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Adm ,Project Governance Committee Meeting ,
× RELATED அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்