×

வேளாண் கருத்தரங்கில் ரூ.6.65 லட்சம் நலத்திட்டம்

சிவகங்கை, அக். 23: சிவகங்கையில் வேளாண்மைத்துறை சார்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு துவக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 35 அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடன்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் மற்றும் காய்கறி நாற்றுகளும், 5 பயனாளிகளுக்கு மண்வள அட்டையும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ. 6.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் சசிகலா மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட...