×

சாலை விரிவாக்க பணி ஆய்வு

திருப்பரங்குன்றம், அக்.23: திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் தாலுகாவிலுள்ள நிலையூர் முதல் பிட் மற்றும் இரண்டாம் பிட் ஆகிய கிராமங்களில் நேற்று கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் பிரியங்கா, பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்கள் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது நிலையூர் விஏஓ மட்டும் உடனிருந்தார். மற்ற வருவாய் துறை அலுவலர்கள் யாரும் இல்லாமல் திடீரென ஆய்வு மேற்கொண்டது வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகு மாலை திருமங்கலம் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், துணை தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Road ,work inspection ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...