×

ரயில்வே பாலம் அமைப்பதற்கு அளவிடும் பணிகள் துவக்கம்

திருமங்கலம், அக்.23: ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அளவிடு பணிகள் திருமங்கலத்தில் துவங்கியுள்ளது. திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் ரயில்வே ஸ்டேசன் அருகே ரயில்வேகேட் அமைந்துள்ளது. தினசரி 60க்கும் மேற்பட்ட முறை மூடி திறக்கும் இந்த ரயில்வே கேட்டினை கடந்து செல்லும் பொதுமக்கள் கேட் அடைப்பால் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். ரயில்வே மேம்பாலம் வேண்டும் என அவர்கள் நீண்ட நாள்களாக கோரி வந்தனர்.இந்நிலையில் திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேம்பாலம் எந்த இடத்தில் துவங்கி எங்கு முடிவடையும் இதனால் எந்த பகுதியில் கட்டிடங்கள் இடிக்கப்படும் உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வந்தன. நேற்று திருமங்கலம் யூனியன் அலுவலகம் எதிரே மேம்பாலத்திற்கான அளவிடு பணிகள் துவங்கின. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பணியில் ஈடுபட்டனர். ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கினால் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மாற்று இடத்திற்கு இடம் மாற்றப்படும் என தெரிகிறது.

Tags :
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு