×

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 23: இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். சிவில் நீதிபதி தேர்வில் தமிழ் தெரியாதவர்களும் பங்கேற்கலாம் என்பதை கண்டித்தும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துஅமுதநாதன் சிறப்புரையாற்றினார். மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகன்குமார், முன்னாள் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : lawyers ,
× RELATED வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்