விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வில் தகவல் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல் மாவட்டத்தில் அக்டோபர் - 2019க்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (அக்.24ம் தேதி வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவுள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: