×

ஆக்கிரமிப்பால் உடைப்பு கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல நிதியுதவி

திண்டுக்கல், அக். 23: தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டிற்கு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
< www.bcmbcmw.tn.gov.in > இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் அக்.30ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புனிதப்பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி விண்ணப்பம் 2019-20” என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அக்.30ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். நேரில் செல்ல வேண்டியது இல்லை. மேலும் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நல இயக்குநரகத்தை (தொலைபேசி எண் 044-28520033) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Occupation Sponsoring Christians ,Jerusalem ,
× RELATED இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத்...