×

குஜிலியம்பாறையில் விபத்தில்லா தீபாவளி செயல்முறை விளக்கம்

குஜிலியம்பாறை, அக். 23: குஜிலியம்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் குஜிலியம்பாறை கம்பன் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முத்துப்பாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். அப்போது விபத்தில்லா தீபாவளி எப்படி கொண்டாடுவது, தீ பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செயல்முறை விளக்கம் அளித்து செய்து காண்பிக்கப்பட்டது.

Tags :
× RELATED குறட்டை விடுபவர்களுக்கு கொரோனாவால் அதிக ஆபத்தா? டாக்டர் விளக்கம்