வத்தலக்குண்டு அருகே சிறப்பு கிராமசபை

வத்தலக்குண்டு, அக். 23: வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டியில் கிராம வளர்ச்சி திட்ட சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.ஊர் பிரமுகர் செல்வராஜ் தலைமை வகிக்க, பற்றாளர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்மேகம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் (பொ) செல்லத்துரை வரவேற்றார். சிறப்பு பார்வையாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்காக பொதுமக்களோடு கலந்துரையாடினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: