×

விண்ணப்பிக்க அக்.30 கடைசி ஒட்டன்சத்திரத்தில் டெங்கு விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், அக். 23: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு, நேச்சர் டிரஸ்ட், கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் வரவேற்றார். டிரஸ்ட் சேர்மன் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ பிரிவு டாக்டர் ரதிதேவி தலைமை வகித்து டெங்கு கொசு உற்பத்தியாகும் முறைகள் குறித்தும், டெங்கு வந்தால் என்ன மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மருத்துவமனை பணியாளர் மேரி கலைச்செல்வி, திருமலைசாமி, ஆறுமுகம், பூபதி, நடைபயண குழு செயலாளர் போஸ் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அசோசியேஷன் மாவட்ட பொருளாளர் கோபி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசலில் சிக்கி தவிக்கும் விக்கிரமங்கலம்