பழநியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழநி, அக். 23: தெலங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பழநி யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழநி வட்டக்கிளைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் விஜயன் விளக்கவுரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர், சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கெண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கானாவில் போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: