அடிவாரத்தில் அச்சத்துடன் நடமாட்டம் கோர்ட் உத்தரவால் வழக்கு பொதுமக்கள் அச்சம் தடுப்பு மீறி செல்ல தடை வகுப்பறையில் கற்றல் உபகரணங்கள் கட்டாயம்

குஜிலியம்பாறை, அக். 23: ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கணித அறிவியல், ஆங்கில உபகரண பெட்டிகள், புத்தகங்கள், அகராதிகள், மடிக்கணினி, விளையாட்டு பொருட்கள், பயிற்சி கையேடுகள் உள்பட பல்வேறு வகையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது வகுப்பறைகளில் இத்தகைய உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. தவிர, பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப் பொருட்கள் மற்றும் கல்விச்சீர் மூலம் கிடைக்கும் உபகரணங்கள் பள்ளிகளில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பித்தால்தான் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். மேலும் தேசிய அடைவு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். எனவே ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்கள், குறுவள மைய ஒருங்கணைப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: